தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஃபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால், அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்