இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
கொழும்பு டைம்ஸ்.நெட் (Colombo Times.net) இணையம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது. சவுதி அரேபியாவில் “அரப் நியுஸ்” பத்திரிகையில் சுமார் 35 வருட நீண்டகால ஊடகத்துறையின் அநுபவத்தைக் கொண்ட ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த றசூல்டீன் “தமிழ் மலர்” என்ற பெயரில் சவுதி ஆரேபியாவில் “டெப்லொய்ட்” அளவிலான தமிழ் பத்திரிகையை ஆரம்பித்து வெளியீட்டு வந்தார்.
மொஹமட் ரசூல்டீன் அவர்கள் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே ” கொழும்பு டைம்ஸ்” இணையம். நான்கு வருட காலத்திற்குள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் இந்த இணையத்தை பார்வையிடத் தவறுவதில்லை என்பதை அதனை “லைக்” செய்வதிலும் பகிர்ந்து கொள்வதிலும் அறியமுடிகின்றது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ரசூல்டீன் வளர்த்துக்கொண்டுள்ளதனால் சூடான செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளன.
வை.எம்.எம்.ஏ. மூலம் தன்னை சமுகசேவையிலும் ஈடுபடுத்திக்கொண்ட இவர் சமூகம் சார்ந்த விடயங்களையும் இணையத்தின் ஊடாக வெளிப்படுத்திவந்தார்.
அரபு நாடு ஒன்றின் பிரஜை ஒருவர் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட செய்தி கொழும்பு டைம்ஸ் இணையத்தில் பதிவிடப்பட்ட போது உடனடியாக பிரதம ஆசிரியரை தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி ஒருவர் ஏன் அந்த செய்தியை பதிவிட்டீர்கள் என்று கேட்டபோது ஏன் அந்த செய்தி உண்மையில்லையா? என திருப்பிக் கேட்க, செய்தி உண்மை. அந்தச் செய்தி எமக்கு எதிரானதே எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தின் நேர்மைத் தன்மையையும் பக்கசார்பற்றதையும் உண்மையை உலகறியச் செய்வதையும் பறைசாற்றி நிற்கின்றது.
பூகோல உலகத்தில் சகலதும் கைக்குள் சிக்கியிருக்கும் நிலையில் அச்சு ஊடகங்களை சமூக ஊடகங்களையே விரும்பிப் பார்க்கும் நிலமையே உருவாகியுள்ளது. பத்திரிகைகளை வாங்கி நீண்ட நேரம் வாசிப்பதைவிட இணைய மற்றும் முகநூல்கள் மூலம் சுருக்கமாக செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளன. நாளை பத்திரிகைகளில் வரவிருக்கும் செய்திகளை இன்றய தினமே உடனுக்குடன் இணைய வழியாக பார்வையிடுவதன் ஊடாக மக்களிடம் இலகுவில் சென்றடைகின்றன. இவ்வாறான நிலையில் இணையத்தின் சேவைகள் பிரபலமடைந்து வருவதனால் ” கொழும்பு டைம்ஸ் நெட்” ஆங்கில இணையத்திற்கு சமாந்திரமாக தமிழ் மொழி இணயத்தையும் ஆரம்பிக்குமாறு உலகின் பல பாகங்களிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கோரிக்கைகள் விடுத்தவன்னம் இருந்தன.
இக்கோரிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது, எமது அபிமானிகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் பல வேலைப் பழுவுக்கு மத்தியில் களம்பு டைம்ஸின் சகோதர இணையமாக தமிழ் பிரிவை ஆரம்பிக்க பிரதம ஆசிரியர் மொஹமட் றசூல்டீன் தீர்மாணித்தார்.
அதன் பெறுபேராக “களம்பு டைம்ஸ்” தமிழ்
இணைய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பு தேவை. அதற்காக இதனை “செயார்” செய்யுங்கள் “லைக்” செய்யுங்கள்.
A very good move.Need of the hour.