இஸ்மத்துல் ரஹ்மான்
நீர்கொழும்பு
போதைப் பொருள் வியாபாரியும் திட்டமிட்ட குற்றச்
செயல்களில் ஈடுபடுபவருமான கனேமுல்ல சன்ஜீவ விமான நிலையத்தில் வைத்து
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டின் கத்மண்டு நகரிலிருந்து 13ம் திகதி மாலை 5.46 மணியளவில் UL 182 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
வந்திறங்கிய சன்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சன்ஜீவ குடிவரவு குடிஅகல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.
இவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வியாபாரியும் திட்டமிட்ட குற்றச் செயல்களில்
ஈடுபட்டுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடிஅகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நடாத்தப்படும் விசாரணையின் பின்னர் அவரை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.