ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.05.05
சர்வதேச செவிலியர்(தாதியர்) கல்வி மருத்துவ வளாகத்தின் 4ஆவது பட்டமளிப்பு விழா -2024 நேற்று சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்கலைக்கழகத்தின் நிறுவுனரும் தலைவருமான றிமாஸா முனாப் தலைமையில் நடைபெற்றது மேற்படி பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக டொக்டர் மரீனா தாஹாவும் விசேட அதிதிகளாக டொக்டர் திருமதி பிரியா சமானி, பேராசிரியர் பிரசன்ன பிரேமதாஸ, சென்னை நேசம் கல்லூரியின் தலைவர் கே.எஸ்.எம்.யூசுப், வர்த்தக பிரமுகர் ஹஸன் அலால்டீன் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் பிரதம அதிதி உள்ளிட்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.