உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட ‘5 டிகிரி செல்சியஸ்’ வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
அதன்படி ’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும்.
அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது