இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் 04.05.2024 பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மற்றும் இலங்கையில் ஜப்பானால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.