எம்,ஏ.எம்.நிலாம் நிமிர்த்துவாரா
(கொழும்பு விசேட செய்தியாளர்)
முஸ்லிம் மீடியா போரத்தின் முதுகெலும்பை முறித்து விடுமளவுக்கு,மூத்த ஊடகவியலாளர் எம்,ஏ,எம்,நிலாமின் இராஜினாமா அமைந்துள்ளது.நாட்டின் அரசியலைப் புரட்டியும், நிமிர்த்தியும்,குறுக்கியும் மற்றும் சுருட்டியும் வைத்துள்ள சனல்-04வின் விவகாரம் போன்று, எம்,ஏ,எம், நிலாமின் இராஜினாமா ஊடகத்துறையில் விஸ்வரூபமெடுக்கலாம். பிரதான தமிழ் பத்திரிகைகள் சகலதிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் நிலாமுக்குண்டு.தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உட்பட பிரபல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய நிலாமிடம், சமூகங்களின் சவால்கள் குறித்த விரிந்த பார்வைகள் உள்ளன.ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ,சீ,ஏ.கபூரின் காலத்திலிருந்து ஸ்தாபகர்களில் ஒருவராக இந்த அமைப்புடன் இயங்கிய நிலாம் ஏன், இராஜினாமாச் செய்தார். ஊடக இதயங்களில் இழையோடியுள்ள கேள்விகள் இதுதான்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திலிருந்து முற்றாக விலகினாரா அல்லது நிறைவேற்றுக் குழுவிலிருந்து விலகினார? இல்லை,பிரதித் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்குகிறாரா?இதில் குழப்பம் நீடிக்கிறது.இது மூன்றையும் செய்துவிடுவாராயின் இந்த அமைப்பின் முதுகெலும்பு முறிந்த கதைதான்.பழுத்த அனுபவமும் பழமையான பக்குவத்துடனும் எம்,ஏ,எம்,நிலாம் பழகுபவர்.இதனால்,எல்லோருடனும் இவரது உறவு நீடிக்கிறது.ஆயுளின் முக்கால்வாசியை ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் கடத்திவிட்டீர்கள்,எஞ்சிய எச்ச சொச்சங்களையும் அங்கிருந்தவாறே முடித்து விடுங்கள் என,
நெருங்கிய ஊடக சகாக்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிய வருகிறது.இப்படிப் பணியாற்றினால்,எஞ்சிய காலத்திலாவது
இவருக்கு உரிய கௌரவம் கிடைக்குமா?இந்த அமைப்பில் கனவான்களும்,கனிவானவர்களும் இருந்தால்,எம்,ஏ,எம், நிலாமுக்கு உரிய கௌவரம் கிடைத்திருக்கும்.நாட்டின் உச்ச அதிகாரத்திலுள்ள ரணிலுடன் உலகின் உச்ச அரசியல் இடமான வௌ்ளை மாளிகைக்குச் சென்று வந்த எம்,ஏ,எம், நிலாமுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உச்ச அதிகாரத்துக்குச் செல்ல முடியவில்லை.இவரின் இந்நிலையை நினைக்கையில் ஒரு பாடலின் இந்த வரிகள் “ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ” ஞாபகத்துக்கு வருகிறது.கண்ணதாசன் இருந்தால் எம்,ஏ,எம், நிலாமின் இந்நிலைக்கும் ஒரு வரி எழுதியிருப்பார்