இஸ்மதுல் றஹுமான்
டுபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள கிரிகொல்லாவின் மேலும் ஒரு நெருங்கிய உதவியாளர் 20 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கையை மேற்கொண்டு நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு நடாத்திய சுற்றிவலைப்பில் நீர்கொழும்பு கல்கந்த சந்தியில் வைத்து 24 ம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரை நிறுத்தி பரிசோதித்தபோது அவரிடம் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 20 கிராம் 315 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் டுபாய் நாட்டில் தலைமறைவாகி பிரபல திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் போதைப் பொருள் வியாபாரியான கிரிகொல்லாவின் நெருங்கிய உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்வர் ஆண்டியம்பலம, வல்பொலவத்தயைச் சேர்ந்த தொரனேகொட முதியன்சலாகே ஜயந்த பண்டார எனும் 27 வயது நபராவர்.
சந்தேக நபரிடமிருந்து 5 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்பன வழங்குப் பொருளாக பெயரிடப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவை பெற்று தடுத்து வத்து
விசாரணை நடாத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.