மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு காற்று நீரோட்டங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த வானிலை ஆய்வாளர் சமிந்த டி சில்வா கூறினார்.
எதிர்வரும் 14 நாட்களுக்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனைத்து சுகாதார ஆலோசனைகளுக்கும் பெற்றுகொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.