73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பான விதிமுறையில் 03.05.2024 கையொப்பமிட்டதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.