காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை 03.05.2024 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார மற்றும் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எச்.எம். நவூஷாட், ஆசிரியர் குழாம் சார்பில் எஸ்.எம்.நவாஸ், எம்.எஸ்.எம்.நலீம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ரிலாப் மொஹமட், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எல்.மொஹமட் ரிப்கான், எம்,எஸ்.எம். நிலார்தீன் உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.