உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்து நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தை முதல் காலாண்டில் 296.2 மில்லியன் ஏற்றுமதிகளை எட்டியுள்ளது.
இது எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சியாகும். பத்து கடினமான காலாண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதற்கு, கையடக்க தொலைபேசிகளுக்கான தேவை அதிகரிப்பு, விற்பனையாளர்களின் புதுப்பிக்கப்பட்ட செயலிகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் ஸ்திரத்தன்மையை அறிமுகப்படுத்தியமையே காரணமாக அமையலாம்.
இதற்கமைய, தென் கொரியாவின் (South Korea) கையடக்க தொலைபேசியானது 60 மில்லியன் யூனிட்கள் ஏற்றுமதியில் 20 சதவீத பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், அமெரிக்கா (America) 16 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தையும் சீனா (China) 14 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன” என கூறியுள்ளது.