ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் 01.05.2024 கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள சதாம் வீதியில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.
நாட்டின் பலபாகங்களில் இருந்தும் வந்த கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பு 12 குணசிங்கபுரம் குணசிங்க விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி தமது ஊர்வலத்தை ஆரம்பித்து ஒல்கோட் மாவத்தை மற்றும் புகையிர நிலை வீதியூடாக சதாம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபத்திற்கு ஆதரவாளர்கள் வருகை தந்தனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கூட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பபாளர்கள், தொண்டர்கள் என பெருந்திரலானவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.