BBC சிங்கள சேவையில் ஊடகவியலாளராக கடமையாற்றிய AZAM AMEEN பதவி நீக்கப்பட்டமை அநீதியானது என இலங்கை தொழில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது……
இச்சேவையில் சுமார் 10 ஆண்டுகளாக AZAM AMEEN மிக நேர்மையான முறையில் சேவையாற்றியுள்ளமை அவர் சார்பில் சட்டத்தரணிகளால் முன் வைக்கப்பட்டுள்ள தகவல் அறிக்கை மூலம் தெளிவாகிறது என தொழில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள
தீர்ப்பில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது
திரைப்பட நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமனாயக தொடர்பில் இவரால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி ஒன்று திரிவுபடுத்தப்பட்டு வெளியானமை
தொடர்பில் இவர் தொடர்பான சர்ச்சை இவர் பதவி விலக்கப்பட காரணம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது…..
இவர் பதவி விலக்கப்பட இவரால் எந்த முறைகேடுகளும் நடந்ததாக
உறுதிப்படுத்தப்படாத நிலையில் தனிப்பட்ட வெறுப்புக்கு இணங்க BBC இன் இலங்கை பிரதிநிதி Ian Haddow இவர் மீது முன்வைத்த தன்னிச்சை முடிவால் இவருக்குப் இப்பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாக கடந்த 26 ஆம் தொழில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
இவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஈடாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்
இவருக்கு நட்டவீடு பெறுவது தொடர்பான யோசனை ஒன்றையும் முன் வைத்துள்ளனர் AZAM AMEEN தலை சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் NM AMEEN அவர்களின் புதல்வர் ஆவார்