இஸ்மதுல் றஹுமான்
ஒரு கோடி ரூபா பெறுமதியான மிக அரிதான 2 கஜமுத்துக்களுடன் இரு சந்தேக நபர்களை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.பீ.பீ. தல்வத்தவின் பனிப்புரையில் மோசடி தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் எஸ். காண்டீபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நீர்கொழும்பு ஏத்துக்கால் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேக நபர்கள் இருவரும் தங்கியிருந்த போது கஜமுத்துவை வாங்குவதற்காக வேடம் பூண்ட ஒருவரை அனுப்பி இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு கஜமுத்துக்களும் பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
தெவுந்தர மற்றும் கனேமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த 42, 24 வயது நபர்களே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.