கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 30.04.2024 வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.