இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
29.04.2024 மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.