நாட்டில் முதல் முறையாக ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் சத்திர சிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவைச் சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாகச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதாகவும் தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.