பல கோரிக்கைகளை முன்னிறுத்தி 29.04.2024 சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக 28.04.2024 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சம்மேளனத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகல சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்வார்கள் எனவும் அனுராத செனவிரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.