ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து 27.04.2024 நடத்திய புத்தாண்டு நிகழ்வுகள் டீன்ஸ் வீதி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றன.
இதன் போதான பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றததோடு, முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியினால் மகுடம் அணிவிக்கப்பட்டது.
அகில இலங்கை உடல் கட்டழகு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார்.
கித்சிறி ராஜபக்ஷவினால் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சுதுவெல்ல முஸ்லிம் நலன்புரிச் சங்கம் மற்றும் அல் மதரசதுல் ஜலாலியா சங்கத்தின் உறுப்பினர்களால் கித்சிறி ராஜபக்ஷவிற்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த பரிசும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.