25.04.2024 முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 1 கிலோ கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலையை 250 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 400 கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.