அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 24.04.2024 குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.