ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.