இஸ்மதுல் றஹுமான்
பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் 160 இலட்சம் ரூபா பெறுமதியான 1கிலோ கிராம் 312 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு,கிபுளபிட்டிய, ஹொரஹேனவைச் சேர்ந்த 22 வயதான ரவிது சதரெஸ் என்பவரையே மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலன்விசாரணை கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்யதனர்.
இவர் டுபாயில் தலைமறைவாயுள்ள கிரிகொல்லாவின் உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது. தற்போது தடுப்புக் காவல் உத்தரவில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடாத்திவரும் கிரிகொல்லாவின் மற்றொரு உதவியாளரான நெரஞ்ஜன் லக்மால் முனசிங்க வழங்கிய தகவலுக்கு அமைய நீர்கொழும்பு, போலவலான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பேக் ஒன்றை எடுத்துச் செல்லும் போது பொலிஸாரால் சுற்றிவலைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 1கிலோ கிராம் 312 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைபற்றப்பட்டதுடன் அவரிடமிருந்து கடவுச்சீட்டும் கைபற்றப்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.