Fox Hill Supercross கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு கார்களின் சாரதிகள் இருவரும் பொலிஸாரால் 22.04.2024 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய வாகன சாரதிகள் இருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவர்களை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் சிக்கி தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு வாகன சாரதிகளிடமும் பண்டாரவளை நீதவான் வாக்குமூலம் பதிவு செய்தார்.