கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு மேல் இடது மூலையில் பயணக் கட்டணத்தைக் காட்டும் மீற்றரை பயணிகள் பார்க்கும் வகையில் வைத்திருப்பது கட்டாயமாகும் என்று அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு செல்லாத முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
முச்சக்கர வண்டிகள் கையடக்கத் தொலைபேசி மூலம் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பில் முறைப்பாடுகளை 0112 860 860 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறும் மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.