ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான பிராந்திய அலுவலகம் நுவரெலியாவில் திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – லேடி மெக்கலம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 22.04.2024 திறந்து வைத்தார்.
இந்த அலுவலத்தின் ஊடாக மத்திய மாகாணத்தில் உள்ளவர்கள் சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையான அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம், விரைவில் ஒருநாள் சேவைகளும் இந்த காரியாலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.