ஐ. ஏ. காதிர் கான் –
வலம்புரி கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கம், (23) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
கவிஞர் கலாபூஷணம் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்துகிறார்.
நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை, வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.