இஸ்மதுல் றஹுமான்
இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் மரணமடைந்தவர்களை நிணைவு கூர்ந்து நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தினத்தில் உதவி பேராயர்களான ஜே. டீ. அன்தனி மற்றும் மெக்சல் சில்வா தலைமையில் நேற்று 21 ம் திகதி காலை 8.30 மணிக்கு விஷேட பூசை இடம் பெற்றது. குண்டு தாக்குதல் நடந்த நேரமான 8.45 மணிக்கு தேவஸ்தானத்தின் மணி ஓசை எழுப்பப்பட்டு 2 நிமிட மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
விஷேட பூசையை நடாத்தியபோது உதவி பேராயர் மெக்சல் சில்வா உரையாற்றுகையில் இன்றைய போல் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு வழிபாட்டிற்கு வந்த 273 பேர்கள் மீண்டும் வீடு செல்லவில்லை. 219 பேர் கட்டுவபிட்டிய தேவஸ்தானத்திற்குள் தமது உயிரை தியாகம்செய்தனர்.
40 சிறுவர்கள் உட்பட 500 பேரளவில் இன்னும் நோயுற்று இன்றும் வேதனையில் உள்ளனர். ஆட்சியாளர்களிடம் நீதி, சாதாரணம் கிடைக்கு புனித மாதாவிடம் வேண்டுகிறோம் என்றார்.