ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் 21.04.2024 காலை 8.45 முதல், இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சகல தேவாலயங்களிலும் மணி ஒலிக்கவிடப்பட்டதை தொடருந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை 8.40 க்கு விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 407 பேர் காயமடைந்தனர்.