நாட்டில் சுமார் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில்19.04.2024 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.