திட்ட அடிப்படையிலான நிதியுதவியின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஒபெக் நிதியம் தெரிவித்துள்ளது.
தம்முடனான சந்திப்பின் போது, ஒபெக் நிதியத்தின் தலைவர் அப்துல்ஹமீட் அல்கலிபா இதனை அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால மாநாட்டுக்காக வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாரிஸ் கிளப்பின் இணைத்தலைவர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.