யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் பிரதீபனின் மகன் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் சொகுசு ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மாவட்ட செயலாளர் பிரதீபனின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.