மஹவ மற்றும் ஓமந்தை இடையே புகையிரதம் பயணிப்பது பாதுகாப்பற்றதாக உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், மேற்படி புகையிரத பாதையில் புகையிரதம் செல்வது பாதுகாப்பற்றது என சில தொழிற்சங்கங்கள் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புகையிரத பயணிகள், வாகனங்கள் மற்றும் கடவைகளில் செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பல தடவைகள் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் பல சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இணக்கப்பாட்டுக்கு அமைய கையாளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.