( ஐ. ஏ. காதிர் கான் )
பௌர்ணமி தின கவியரங்கு வரிசையில், “வலம்புரி கவிதா வட்டம்” தனது 107 ஆவது கவியரங்கினை புத்தாண்டின் முதலாவது கவியரங்காக (13.01.2025) திங்கட்கிழமை நடத்தியது.
மினுவாங்கொடை – கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய தமிழ், கணித பாட ஆசிரியர் கவிஞர் மினுவாங்கொடை ஏ. சிவகுமார், கவியரங்கினை தலைமையேற்று சிறப்பாக நடாத்தினார்.
வகவ ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி முன்னிலை வகித்தார்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்வினை நெறிப்படுத்தி தலைமையுரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார். பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார்.
அண்மையில் எம்மை விட்டும் பிரிந்த பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன், ஹம்ஸா ஹனீபா, ரிஸ்கி ஷரீப், அந்தனி ஜீவா ஆகிய ஆளுமைகளுக்கான மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற வாசுகி வாசு, குறும் படம் தந்த கலைஞர் அமல் பாண்டி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
கவிஞர் மினுவாங்கொடை ஏ. சிவகுமார் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில், கவிஞர்கள் என்.பி.எம். தஸ்லீம், எஸ். தனபாலன், ஹமீத் அல் ஹுசைனி மாணவர்
அப்துல்லாஹ் சியாமீர், கலேவெல ராஜன் நஸீர்தீன், தி. ஸ்ரீதரன், பாணந்துறை
பாத்திமா ரிஹ்லா, சட்டத்தரணி தவச்செல்வன், மலாய்கவி டிவாங்ஸோ
ராஜா நித்திலன், ஆர். தங்கமணி, சிந்தனைப் பிரியன் முஸம்மில், Mbs பாலா, நமடகஹவத்த கலேவெல நபீல் இப்னு இஸ்மாயில், வெளிமடை ஜஹாங்கீர், தாமரைச் செல்வி, பவானி சச்சிதானந்தன், வாசுகி வாசு, பரீஹா பாரூக் ஆகியோர் கவி மழை பொழிந்தனர்.
காரைக்கவி பத்மநாதன், எஸ். ஜெகதீசன், எம்.பீ.எம். சித்தீக், ஆர். சந்திரசேகரன், கல்லொளுவை பாரீஸ், எஸ்.எச்.என். நுஸ்ரியா, அமல் பாண்டி, வி. பவித்திரன், ஹரிபிரியன் தேவ் போன்றோர் சபையை மலர்களால் அலங்கரித்தனர்.