சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (27.02.2025) ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
குழுநிலை விவாதம் இன்று(27.02.2025) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிதி ஒதுக்கங்கள் உள்ளிட்ட நிதி அமைச்சின் ஒதுக்கங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
குழுநிலை விவாதம் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதுடன், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று(21.03.2025) மாலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.