இலங்கையின் முதன்மை பணவீக்கம் மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்க வீதம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆகக் குறைந்துள்ளது.
இது 2024 டிசம்பர் மாதத்தில் -2.0% ஆக பதிவாகி இருந்தது.
இதேவேளை, உணவுப் பணவீக்கமும் 2024 டிசம்பரில் -1% ஆக இருந்த நிலையில், 2025 ஜனவரியில் -2.5% ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் 2024 டிசம்பரில் பதிவான -2.9% இலிருந்து -5.2% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.