( ஐ. ஏ. காதிர் கான் )
“திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பு, கடந்த 10 வருடங்களாக கலை, இலக்கியம், சமூகம், கல்வி மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் பலதரப்பட்ட சமூக நலப் பணிகளைச் செய்து வருகிறது.
“திறனொளி” கலை மன்றம், இதுவரையும் 17 சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக, பல எழுத்தாளர்களினதும் கவிஞர்களினதும் ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு, அவர்களுடைய எழுத்தாற்றலை மென்மேலும் வளர்த்துக் கொள்ள பெரும் பங்காற்றி வருகிறது. அதுமாத்திரமல்லாது, நாடளாவிய ரீதியில் உள்ள பல்துறை சார்ந்த கலைத் திறமையாளர்களை இணைத்து “Thiranoli Art Forum” ஆக இயங்கி வருவதாக, “திறனொளி” மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் “சுவதம்” அறிவிப்பாளர் ஏ.சீ. நௌஷாட் தெரிவித்தார்.
இந்த மன்றத்தின் மற்றுமோர் வெளியீடாக, கவிதைத் துறையில் கால் தடம் பதித்துள்ள இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், “திறனொளி யின் திறமைக்கான தேடல்” எனும் தொனிப்பொருளில் “திறனொளியின் முத்துக்கள்” எனும் கவிதைத் தொகுப்பு நூலையும் விரைவில் வெளியிடவுள்ளது.
இதற்காக, நாடளாவிய ரீதியில் இருக்கும் கவிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்பங்கள் யாவும், இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப் படிவங்களுக்கும், 0777 113 963
என்ற இலக்கத்துடன் அல்லது thiranoliacmn@gmail.com என்ற ஈ-மெயில் மூலமாகத் தொடர்பு கொள்ள முடியுமெனவும், “திறனொளி” மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.சீ. நௌஷாட் மேலும் தெரிவித்தார்.