இஸ்மதுல் றஹுமான்
77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 10 சிறைக்கைதிகள் விடுதலை பெற்றுப் சென்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பில் இவர்களுக்கு விடுதலை கிடைத்தன.
இவர்களில் 08 ஆண் கைதிகளும் 2 பெண் கைிகளும் அடங்குவர்.
இவர்களில் குறுகிய கால, நீண்ட கால கைதிகளில் அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள், ஒருவரின் பிணைக்காக கையெழுத்திட்டவர் என 10 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று காலை விடுதலையானார்கள். இவர்களை நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதான ஜெய்லர் அஜித் பிரசன்ன மற்றும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.