கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளை கொண்டுச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளின் மொத்த பெறுமதி 1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.