கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களை கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இரவு நேர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.