நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களிலும் சற்று மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு