இஸ்மதுல் றஹுமான்
காதி நீதிமன்றில் வழக்கு விசாரணை நடக்கும் போது காதி நீதிபதி முன்னிலையில் முறைப்பாட்டாளர் சார்பான ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை மார்ச் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ. குணதாஸ கட்டளையிட்டார்.
சந்தேகநபரான செய்யது நியாஸ் மொஹமட் என்பவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.ஜீ. குணதாஸ முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்தல், மன்றுக்குள் வைத்து ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொலிஸ் சார்ஜன் சுஜித் ரன்துன் (35402) மன்றில் கூறுகையில்
கணவன் மனைவி தகராறு தொடர்பாக நீர்கொழும்பு காஸி நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம் பெற்றது.
மனைவியால் தொடரப்பட்ட இவ் வழக்கில் கணவர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.
பிரதிவாதியான கணவன், மனைவியின் தந்தையான தனது மாமனாரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து தாக்கியதாக தெரிவித்ததுடன் காயபட்ட அவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறினார்.
சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டதரணியை நோக்கி பதில் நீதவான் குறிப்பிடுகையில் இவ்வாறான குற்றச்செயல்களை செய்தவர் சார்பாக முன்னிலையாவது கவலைக்குறியது எனக்கு கூறினார்.
சந்தேக நபரை மார்ச் மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.