கண்டி – பேராதனை இடையே ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால், கண்டி – மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கண்டி – பேராதனை இடையிலான மலையகப் பாதையின் ரயில் சேவைகளை நேற்று (11) காலை முதல் தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்ட காரணத்தினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழு அப்பகுதியை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை ரயில் மார்க்கத்தில் பொதிகளை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது