அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமந்தா, 04.02.2025 நாடு திரும்பினார்.
இந்தப் போட்டி கடந்த 30 ஆம் திகதி உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற நிலையில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில், அவர் 04.02.2025 அதிகாலை 01.55 மணிக்கு டோஹா கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும், காலை 09.00 மணியளவில் சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியிலும் இஷாதி அமந்தா கலந்து கொண்டிருந்தார்.