இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல் சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்துவரும் ஐந்து வருடத்திற்கு இவரே வேந்தராகச் செயற்படுவார்.
இந்த நியமனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டது .
இந்த நியமனம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டப் பிரிவு 32 இன் படி, 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கச் திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது .