( ஐ. ஏ. காதிர் கான் )
இவ்வருட புனித ரமழான் மாதத்தை வரவேற்கின்ற நிகழ்வும், கடந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், (27.02.2025) வியாழக்கிழமை மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய உம்மு ஹபீபா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கடந்த ரமழானில் அல்குர்ஆனை அதிகமாக ஓதிய மாணவர்களுக்கும், வினா விடை நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்துடன், இவ்வருட ரமழானை காத்திரமான மற்றும் பயனுள்ள வகையில் கழிப்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவு சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அல்ஹாஜ் இக்பால் (முப்தி), விசேட பேச்சாளராக மத்திய அஹதிய்யா சம்மேளனப் பிரதித் தலைவர் ஆஷிக் அக்ரம் ஜுனைட், அனுசரணையாளர் அல்ஹாஜ் ஜெஸ்மி மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.